Posts

Showing posts from October, 2017

திறந்திருக்கும் தேன் பாத்திரம்..~ 😋🍶☕

💝 *Positive Life*  💝 அந்நிய ஆண்களிடம் பேசும்போது அரைமுக்காடு கால் முக்காடு போடுவது நைட்டி மட்டும் அணிந்துகொண்டு வீட்டு வெளியே நடமாடுவது பால்காரன் காய்கறிகாரனிடம் கேபிள்காரனிடம் தலைத்துணி இல்லாமல் சகஜமாக சிரித்துப்பேசுவதற்கு முக்கியக்காரணம் கணவர்கொடுக்கும் இடமே!!! இத்தகைய செயல்களை கணவர் வீட்டில் இருக்கும்போது பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது சைத்தானுக்க அனுமதி கொடுப்பது போலாகும். கண்டிக்கும் பொறுப்பு வழிகாட்டும் பொறுப்பு பாதுகாக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளது. அவனோ அயல்நாட்டில் இருந்தால் வேறு வினையே வேண்டாம். மச்சான் கொழுந்தனிடம் குழைந்து கிண்டல் பண்ணி இரட்டை அர்த்தமாக பேசுவது மார்க்கத்தில தடுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது காய்கறி விற்பவன் பால்காரனிடம் தலைத்துணியும் சரியாக அணியாமல் மணிக்கணக்கில் கதை பேசும் மட்டி மனைவியர்களை யார்தான் திருத்துவது!!! எப்படி தொலைந்தாலும பரவாயில்லை சொன்னாள் கேட்க மாட்டாளே என்ற காரணத்திற்காக கணவன்மார்கள் கண்மூடி இருப்பது வேதனை!!! பெண்களின் தலைவியான பாத்திமா (ரலி) அவர்கள் தங்களை அந்நியர்களின் தீய பார்வைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வ

* சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை: *

Image
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) * சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை: * சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். (புகாரி), இது பிரதான வாயில் என்று சொல்ல முடியாது. சொர்க்கத்தில் நுழைந்த பின்னால் அழைக்கப்படும் வாயில்களையே குறிக்கலாம். (பத்ஹுல்பாரி) யார் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும், நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் என்றும், ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் மர்யமுக்கு அவன் சொன்ன வார்த்தையும், ஆவியும் என்றும், சுவர்க்கம் உண்மையானது, நரகமும் உண்மையானது என்றும் சாட்சி சொல்கின்றாரோ அவர் செய்கின்ற அமலுடன் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தின் எட்டு வாயில்களி

குர்ஆன் போதிப்பது என்ன? சிறு தொகுப்பு!!

Image
!குர்ஆன் போதிப்பது என்ன? சிறு தொகுப்பு!! .. ஒப்பந்தங்களை முறித்து மாறு செய்ய கூடாது. *குர்ஆன் 2:27,16:92* .. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும். *குர்ஆன் 2:27,47:22* .. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது. *குர்ஆன் 2:42* .. நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது. *குர்ஆன் 2:44 61:2* .. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது. *குர்ஆன் 2:60* .. ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்க கூடாது. *குர்ஆன் 2:79* .. பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும் *குர்ஆன் 2:83* ... வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது. *குர்ஆன் 2:84* .. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்றியுங்கள். *குர்ஆன் 2:109* .. நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும். *குர்ஆன் 2:168 ,172* .. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்ற கூடாது. *குர்ஆன் 2:170* .. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைக

அழிவை ஏற்படுத்தும் பொறாமை – 01

Image
அழிவை ஏற்படுத்தும் பொறாமை – 01 بسم الله الرحمن الرحيم மனித குலம் சந்திக்கும் பாரிய ஒரு மனநோய், இவ்வுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்தான வைரஸ் போன்று பரவக்கூடிய ஒரு பெரிய பாவம் இந்த பொறாமையாகும். மேலும், இதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாத அளவுக்கு மனநோயாகவும் இது இருக்கின்றது என்று கூறலாம். இதிலிருந்து படித்தவர்கள், படிப்பவர்கள், தலைவர்கள், தலைவர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருமே தப்பமுடிய வில்லை அவ்வாறான ஒரு பாவமாக இருந் து கொண்டிருக்கின்றது. மனிதர்களை அழித்துவிடக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்ததாகவும் இது இருந்து கொண்டிருக்கின்றது. இத்துர்குணம் ஆலிம்களுக்கு மத்தியிலும் காணப்படுகின்றது. இக்குணம் காரணமாக ஒருவரையொருவர் சாடுவதும், விமர்சிப்பதும், தூசிப்பதும், தங்களுக்கு சார்பாக சிலரை இதற்காக ஒன்று சேர்ப்பதும் இவ்வழியின் காரணமாகத்தான். மற்றும், மாணவர்களுக்கு மத்தியிலும் இதே போன்ற நிலை காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். அவர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற இந்த துர்குணத்தால் ஒருவரையொருவர் சாடுவதும், ஆசிரியர்களிடத்தில் முறைப்பாடு செய்வது

அழகிய முறையில் குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றாய்!

Image
ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் முஹம்மதுநபி {ஸல்} அவர்கள் தனதருமை மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்கு பேரக்குழந்தைகளைக் காணச் சென்றிருந்தார்கள். இருவரும் இல்லை. மகளிடம் விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள். நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி {ஸல்} அவர்கள் பேரக்குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள். மதீனாவின் எந்த ஒரு பகுதியிலும் இருவரையும் காணவில்லை. மதீனாவிற்கு வெளியே பாலைவனத்தை நோக்கி முஹம்மதுநபி {ஸல்} அவர்கள் ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம் விசாரித்த வண்ணம் சென்றார்கள். ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி {ஸல்} அவர்களின் முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து என்ன ஏது? என்று விசாரித்தார். முஹம்மதுநபி {ஸல்} அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள். அப்போது, நாயகமே! கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும் இருப்பார்கள். சற்று முன்னர் தான் இங்கு அவர்களை நான் கண்டேன்” என்

*நாம் ஒரு குடும்பம் நமக்கொரு உபதேசம்*

Image
*நாம் ஒரு குடும்பம் நமக்கொரு உபதேசம்* *ஒவ்வொரு குடும்பத்தாரும் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்.* ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ * 👉🏿 01- நாவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.* 📘 எவர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டிருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் இல்லாவிடில் மெளனமாக இருக்கட்டும். (ஹதீஸ்) 📘 எவர் தனது இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் உள்ள மறுமஸ்தானத்தையும் பாவங்களை விட்டும் பாதுகாக்கின்றாரோ அவனுக்கு சுவர்கம் உறுதி (ஹதீஸ்) * 👉🏿 02- தீரவிசாரனை செய்யாமல் முடிவெடுக்கக் கூடாது.* 📕 ஒரு பாவி உங்களிடம் ஏதேனும் ஓர் செய்தியைக் கொண்டுவந்தால் அதனை தீரவிசாரணை செய்து தெளிவுபெற்றுக் கொள்ளுங்கள்.(குர்ஆன்) * 👉🏿 03- பிறர் மனம் நோகும் படி முகத்தில் பேசக் கூடாது.* 📘 தனது கழுத்தில் துணியைப் போட்டு தளும்புகள் பதியுமளவு இருக்கிய காட்டரபியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல் அவர்கள.(ஹதீஸ்) 📘 பள்ளியில் சிறுநீர் கழித்தவனைக் கூட மனம் நோகாமல் அறிவுரை சொல்லி அனுப்பியவர்கள் நபி ஸல் அவர்கள். (ஹதீஸ்) *