அழிவை ஏற்படுத்தும் பொறாமை – 01
அழிவை ஏற்படுத்தும் பொறாமை – 01
மனித குலம் சந்திக்கும் பாரிய ஒரு மனநோய், இவ்வுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்தான வைரஸ் போன்று பரவக்கூடிய ஒரு பெரிய பாவம் இந்த பொறாமையாகும். மேலும், இதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாத அளவுக்கு மனநோயாகவும் இது இருக்கின்றது என்று கூறலாம். இதிலிருந்து படித்தவர்கள், படிப்பவர்கள், தலைவர்கள், தலைவர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருமே தப்பமுடிய வில்லை அவ்வாறான ஒரு பாவமாக இருந்து கொண்டிருக்கின்றது. மனிதர்களை அழித்துவிடக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்ததாகவும் இது இருந்து கொண்டிருக்கின்றது.
இத்துர்குணம் ஆலிம்களுக்கு மத்தியிலும் காணப்படுகின்றது. இக்குணம் காரணமாக ஒருவரையொருவர் சாடுவதும், விமர்சிப்பதும், தூசிப்பதும், தங்களுக்கு சார்பாக சிலரை இதற்காக ஒன்று சேர்ப்பதும் இவ்வழியின் காரணமாகத்தான். மற்றும், மாணவர்களுக்கு மத்தியிலும் இதே போன்ற நிலை காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். அவர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற இந்த துர்குணத்தால் ஒருவரையொருவர் சாடுவதும், ஆசிரியர்களிடத்தில் முறைப்பாடு செய்வதும், அவர்களுக்கெதிராக சில சூழ்ச்சிகளைச் செய்வதும், கடைசியில் அவர்களின் கல்வி இடைநடுவே நிறுத்தப்படுவதும் அல்லது தடைப்படுவதும் இத்துர்க்குணம் காரணமாகத்தான் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மையாகும்.
தலைவர்கள், அந்தஸ்தில் இருப்பவர்கள், அவர்களுக்கு கீழ் பணி செய்பவர்கள், கட்டுப்பட்டிருப்பவர்கள் என்று நாம் பார்க்கும் போது அவர்கள் அத்தலைமைக்காக மற்றும் பதவிகளுக்காக ஒருவரையொருவர் விரும்புவதற்காக தங்களுக்கு மத்தியில் பல்வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைக் காணலாம். இவ்வாறான மிக மோசமான நடவடிக்கைகள், செயற்பாடுகள் அனைத்திற்கும் இப்பொறாமையே அடிப்படைக் காரணமாகும்.
ஆண்கள், பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அவர்களுக்கு மத்தியிலும் பாசத்தால், அழகால், சிறப்பால், நல்ல நிலைமைகளால், சிறப்பான வாழ்க்கையால் என்று பலதரப்பட்டவிதத்தில் இந்த பொறாமைக் குணம் தன் பட்டியலை விரித்துச் செல்கிறது.
இதேபோன்று இக்கொடுமை சிறியவர்களையும் விட்டுவைக்காது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களுக்கு மத்தியில் இக்குணம் அவசரமாகவே தொற்று விடும் ஒரு தொற்று நோயாக மாறிவிட்டது. பொருட்கள் பரிமாற்றம், பாசப்பரிமாற்றம், அரவணைப்பு என்ற இன்னும் பல அம்சங்களால் இக்குணம் ஏற்படுகின்றது. அண்ணன் தம்பியை அல்லது தங்கையை கொலை செய்துவிட்ட வரலாறுகள், தீங்கிழைத்த காட்சிகள் என்று நாம் ஏராளமாகக் காணலாம். எனவே, இக்குணம் யாரையும் விட்டுவைக்க வில்லை என்பது துள்ளியமாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
அபூமுஆத் ஜமாலுத்தீன் கபூரி
LIKE OUR PAGE AND SHARE ISLAMIC POSTS . www.facebook.com/islamic.ummath
www.facebook.com/the.way.to.jannah
Comments
Post a Comment